தலைநகரை நோக்கி திரண்ட விவசாயிகள் - தடுத்து நிறுத்திய போலீஸ்

  Dr.தர்மசேனன்   | Last Modified : 02 Oct, 2018 08:36 pm
farmers-rally-towards-delhi

தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீஸார் எல்லையில் தடுத்து நிறுத்தினர். விவசாயிகளை கலைந்து போக செய்வதற்காக புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனை மத்திய அரசு காக்கத் தவறிவிட்டதாக பாரதிய கிசான் யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. இதையொட்டி, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் இருந்து, தலைநகர் டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய இந்த பேரணி இன்று காலை டெல்லி வந்தடைவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

144 தடை உத்தரவு 

பதற்றத்தை தடுக்க ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  டெல்லி - உத்தரப் பிரதேச எல்லை நகரங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  டெல்லியை நோக்கிய விவசாயிகளின் பாதயாத்திரையை தடுக்க பல சாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

இதனிடையே விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் மத்திய அரசு தடுக்க முயற்சிப்பது தவாறான முன்னுதாரணம் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close