ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு

  பாரதி கவி   | Last Modified : 07 Oct, 2018 11:57 am
earthquake-in-jammu-kashmir

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.6ஆக பதிவானது. நில அதிர்வு காரணமாக பொதுமக்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “நில அதிர்வு இன்று காலை 8.09 மணியளவில் ஏற்பட்டது. அதன் ஆழம் 206 கி.மீ. அளவுக்கு உணரப்பட்டது ’’ என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரிக்டர் அளவில் 7.6ஆக அந்த நிலநடுக்கம் பதிவானது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பாக்துன்குவா மாகாணத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரு நாடுகளிலும் சேர்த்து அப்போது 80,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close