உள்ளாட்சி தேர்தல்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெறும் 8.3% வாக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2018 05:21 am
kashmir-valley-sees-only-8-3-voter-turnout

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வெறும் 8.3% மக்களே வாக்களித்தனர். ஆனால், ஜம்முவில், சுமார் 70% வாக்காளர்கள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். 

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களாலும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளாலும் கடந்த 13 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், இன்னும் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் தீராத நிலையில் தேர்தல் நடத்தினால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறி, மெஹ்பூபா முஃப்தியின் பிடிபி மற்றும் தேசிய கான்பரன்ஸ் ஆகிய பிரதான காட்சிகள் தேர்தலை புறக்கணித்தனர். 

பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் முதற்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது. 

ஜம்மு எல்லையில் உள்ள 17 நகரங்கள், கிராமங்கள், ரஜோரி, பூஞ்ச் மற்றும் காஷ்மீரின் 8 மாநகராட்சிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தீவிரவாத அச்சுறுத்தங்கள் அதிகமுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், வெறும் 8.3% வாக்குகள் மட்டுமே பதிவாகின. ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில், 65% வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக ஜம்முவின் ஜுரியன் தொகுத்தியில் 89% வாக்குப்பதிவு நடைபெற்றது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close