தேவசம் போர்டில் இருந்து இந்துக்கள் ஒதுக்கப்படுகிறார்களா? கொந்தளிக்கும் பா.ஜ

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 03:59 am

bjp-riles-up-after-kerala-govt-notification-on-devaswom-commissioner

திருவாங்கூர் தேவசம் போர்டு கமிஷனர் பதவிக்கு நேரடியாக ஆட்களை நியமிக்கும் வழக்கத்தை நிறுத்த கேரளா அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இது தேவசம் போர்டில் இருந்து இந்துக்களை ஒதுக்கும் முயற்சி என பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. 

ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, திருவங்கூர் தேவசம் போர்டின் மீது கடந்த 2007ம் ஆண்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் முடிவில், தேவசம் போர்டின் கமிஷனர் பதவிக்கு, போர்டில் இல்லாத வெளியாட்களை நேரடியாக நியமிக்க வேண்டும் என பரிந்துரைக்கப் பட்டது. இந்த விதியை தற்போது கேரளா அரசு மாற்றியுள்ளது. தேவசம் போர்டுக்கு வெளியே இருந்து ஆட்களை நியமிக்கும் வழக்கத்தை கைவிட்டு, துணை கமிஷனர்களுக்கு கமிஷனராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்தது. 

விதி மாற்றம் குறித்த அறிவிப்பின்போது, கமிஷ்னர் இந்துவாக இருக்க வேண்டும் என்ற வாசகம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த விதி மாற்றம், மற்ற மதத்தை சேர்ந்தவர்களை தேவசம் போர்டின் கமிஷ்னராக்கும் முயற்சி என கேரள பா.ஜ.க-வும், சங் பரிவார் அமைப்பும் விமர்சித்துள்ளது.

ஆனால், பா.ஜ-வின் குற்றச்சாட்டுகளை மறுத்து பேசிய தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தரன், "தேவசம் போர்டில் உள்ள அனைவருமே இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. பின் எப்படி வேறு மதத்தை சேர்ந்தவர்கள் வர முடியும்?" என கேள்வி எழுப்பினார்.

"இது ஒரு சூழ்ச்சி. மற்ற மதத்தை சேர்ந்தவர்களை நியமிக்க ஒரு யுக்தி. ஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சியின் போது, குருவாயூர் கோவிலின் தேவசம் போர்டின் தலைவராக ஒரு கிறிஸ்தவர் நியமிக்கப்பட்டார். அதேபோல, சபரிமலையையும் இவர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள்" என்ற கேரளா பா.ஜ-வின் செய்தித்தொடர்பாளர் கோபாலகிரிஷ்ணன் கூறினார். 

"ஒரு விதியில் இருந்து இந்து என்ற வார்த்தையை நீக்கினால், மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அர்த்தமில்லை. தேவசம் போர்டில் உள்ள அடிப்படை பதவி முதல் உயர் பதவி வரை வேறு மதத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சபரிமலை விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் சிலர், இப்படி புதிய பிரச்னையை கிளப்பி  விட பார்க்கிறார்கள்" என்ற அமைச்சர் சுரேந்திரன். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close