அரசு ஊழியரின் பெற்றோரை பாதுகாத்திட சட்டமியற்றிய அஸ்ஸாம் மாநில அரசு

  தர்மா   | Last Modified : 11 Oct, 2018 02:27 pm

government-employees-parent-responsibility-bill-assam

நமக்குத் தெரியுமா?
இந்தியாவிலேயே அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை கட்டாயம் பாதுகாத்திட வேண்டும் என்ற சட்டம் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது.


 அஸ்ஸாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் என்று மட்டுமல்ல பொதுவாக பலர் தங்களது உடல்நலம் குன்றிய அல்லது வயதான பெற்றோரை தங்களுடன் வைத்து பேணிப்பாதுகாப்பது இல்லை என்ற கருத்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வந்தது. வயோதிகமடைந்த பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டு விடுவது என்ற போக்கு அதிரித்து வருவதாகவும் கருத்து எழுந்தது.

இதையடுத்து அஸ்ஸாம் மாநில அரசு பொதுமக்கள் தங்களது உடல் நலம் சரியில்லாத குழந்தைகள் மற்றும் வயோதிகமடைந்த பெற்றோர் ஆகியோரை முறைப்படி பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பியது.

அதன் ஒர் அம்சமாக கடந்த ஆண்டு ஒர் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி அஸ்ஸாம் மாநில அரசு ஊழியர்கள் தங்களது உடல்நலம் குன்றிய குழந்தைகள்  மற்றும் பெற்றோரை  தங்களுடன் மட்டுமே வைத்திருந்து பராமரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

அதுமட்டுமின்றி அவ்வாறு பராமரிக்காத அரசு ஊழியர்கள் குறித்து தகவல் தெரிய வரும் பட்சத்தில், குறிப்பிட்ட ஊழியரின் சம்பளத்திலிருந்து பத்து சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்தது.

மேலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையானது குறிப்பிட்ட அரசு ஊழியரின் உடல்நலம் குன்றிய குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு அரசு மூலம் நேரடியாக வழங்கப்படும் என்றும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close