தேவசம் அமைச்சர் வீட்டின் முன் இளைஞர் போராட்டம்: தண்ணீர் பீச்சியடித்த போலீசார்!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 05:44 pm

bjp-youth-protest-in-front-of-devaswom-ministers-house-police-use-water-cannons

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்ய மறுத்துள்ள மாநில அரசுக்கு எதிராக கேரள பா.ஜ.க இளைஞரணி தொண்டர்கள் போராட்டம் நடத்த, போலீசார் தண்ணீரை பீச்சியடித்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, பல்வேறு இந்து அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்தவுள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துவிட்டதாகவும், அதிலிருந்து பின்வாங்க முடியாது எனவும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இன்று கேரள பாரதிய ஜனதாவின் யுவ மோர்ச்சாவை (இளைஞரணி) சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள், கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனின் வீட்டுக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதால், போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுத்தத்தினார். தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், தண்ணீரை பீச்சியடித்து அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close