‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு!

  சுஜாதா   | Last Modified : 13 Oct, 2018 08:43 am
rahul-gandhi-supports-metoo

'மீ டூ' இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

உலகளவில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த  பாலியல் தொல்லைகள் குறித்து  #மீ டூ (#ME TOO) ஹஷ் டேக் மூலம் சமூக வலைத்தளத்தில் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். இதில் சினிமா துறை, அரசியல் என்று எல்லாம் பக்கங்களில் இருந்தும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  இந்நிலையில், இந்த 'மீ டூ' இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.     

இது குறித்து அவர் தனது ‘ட்விட்டர்’  பக்கத்தில் கூறியிருப்பதாவது, "பெண்களை மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்துவதை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. அப்படி இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். மாற்றத்தை கொண்டு வரும்பொருட்டு உண்மையை தெளிவாகவும், உரக்கவும் சொல்லும் நேரம் இது" என்று அவர் கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close