மத்திய அமைச்சர் மீதான பாலியல் புகாரில் விசாரணை உறுதி: அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2018 10:32 am
sexual-complaint-against-central-minister-will-be-examined-amit-shah

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து உள்கட்சி விசாரணையை பா.ஜ.க. மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரபலமான பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து ”மீ டூ’’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சாதாரண பெண்களும் கூட, அலுவலக ரீதியாக, உறவு ரீதியாக அல்லது வேறு ஏதேனும் வகையில் தங்களுக்கு நேர்ந்த தொல்லைகள் குறித்து பேசத் துவங்கியுள்ளனர்.

அந்த வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராகவும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியலுக்கு வரும் முன்பு, பல்வேறு ஊடகங்களில் அவர் ஆசிரியராகப் பணியாற்றியபோது, பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் பத்திரிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா, ஹைதராபாத்தில்  பேசியபோது ‘’அமைச்சர் மீதான குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தவுள்ளோம். புகார் அளித்த நபர், அவர் வெளியிட்ட பதிவு ஆகியவற்றின் நம்பகத்தன்மை குறித்து நாங்கள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனது பெயரை பயன்படுத்தி நீங்கள் கூட எதை வேண்டுமானாலும் பதிவு செய்துவிட முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் நாங்கள் கண்டிப்பாக விசாரணை நடத்துவோம்’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close