இந்தியாவின் பொறுமையை சோதிக்கிறது பாகிஸ்தான்: நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2018 11:01 am
pakistan-teasing-india-s-patience-nirmala-sitharaman

பயங்கரவாத கட்டமைப்புக்கும், பயன்கரவாதிகளுக்கும் அண்டை நாடான பாகிஸ்தானில் அரசே உதவி வருவது, இந்தியாவின் பொறுமையை சோதிக்கும் வகையில் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசு முறை சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள அவர், பாரீஸில் உள்ள பாதுகாப்பு ஆய்வு தொடர்பான கல்வி நிறுவனத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் கிடைப்பதைத் தடுக்க உறுதிமிக்க முயற்சிகள் தேவைப்படுகின்றன. மேலும், பயங்கரவாதத்துக்கு ஆள் சேர்ப்பது, சர்வதேச அளவிலான பயங்கரவாதிகள் ஒருங்கிணைவது போன்றவையும் தடுக்கப்பட வேண்டும். இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. இந்நிலையில், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் பிரான்ஸ் அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள நாட்டில் பயங்கரவாத கட்டமைப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசே பயங்கரவாதிகளை ஆதரித்து வருகிறது. இந்தியாவின் பொறுமையை அவர்கள் தொடர்ந்து சோதித்து வருகின்றனர். இந்தியா மட்டுமன்றி ஆப்கானிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, எல்லை கடந்த பயங்கரவாதமே முதன்மையான அச்சுறுத்தலாக இருக்கிறது என்றார் அவர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close