வாக்களிக்கும் போது விரல்களில் மை வைக்கக்கூடாது: சத்தீஸ்கர் மாநில மக்களின் விநோத கோரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2018 01:57 pm
chhattisgarh-can-stop-looking-at-putting-ink-on-the-finger-during-the-maoist-voting-in-affected-areas

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளரின் கை விரல்களில் மை வைக்கக்கூடாது என்ற ஒரு விநோத கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 18 தனித்தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் வருகிற நவம்பர் 12ம் தேதியும், மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தலாக வருகிற நவம்பர் 20ம் தேதியும் நடைபெற  உள்ளது. 

இந்நிலையில், இந்த சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்ட் அமைப்பினர் அம்மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு மீறி வாக்களித்தால் அவர்களின் விரல்கள் வெட்டப்படும் எனவும் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டல் அப்பகுதி மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கும் போது கை விரல்களில் மை வைக்கக்கூடாது என மாவோயிஸ்ட்  பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற மாநில தலைமை தேர்தல் அதிகாரி, இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார். விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான பதிலை அளிக்கும் என எதிர்பர்க்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close