மத்தியப் பிரதேசம்: லாரி மோதி ரயில் தடம்பிரண்டு விபத்து

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 03:31 pm
two-coaches-of-delhi-bound-rajdhani-express-derails-in-mp

மத்திய பிரதேசத்தில் இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் லாரி டிரைவர்  உயிரிழந்தார். 

மத்திய பிரதேச மாநிலத்தில் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு, பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  லெவல் கிராசிங் கேட்டை உடைத்து ரெயில் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close