அக்டோபர் 31ம் தேதி எம்.ஜே.அக்பர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 04:16 pm
delhi-s-patiala-house-court-to-examine-statements-of-mjakbar-and-other-witnesses-on-october-31

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் அக்டோபர் 31ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜார வேண்டும் என்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மீடூ மூலம் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து அக்பர் அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தார்.

அதேசமயம், தன்மீது பாலியல் புகாரை முதலில் கூறிய பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே.அக்பர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, எம்.ஜே.அக்பர் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றது. அத்துடன் விசாரணை 31ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தது. அன்றைய தினம் எம்.ஜே.அக்பர் மற்றும் பிற சாட்சியங்கள் நேரில் ஆஜராகி தங்கள் சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close