50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2018 04:11 pm
no-threat-of-disconnection-for-sim-cards-issued-through-aadhaar-government

ஆதார் அட்டையை அடையாள அட்டையாக வழங்கிய 50 கோடி வாடிக்கையாளர்களின் சிம் கார்டுகள் செயலிழக்கும் என்று வெளியான தகவல் பொய்யானது என தனிநபர் அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும்  ஆதார் அட்டையை அடையாளச் சான்றாகப் பெறக்கூடாது என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இதையடுத்து, ஆதாரை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. 

இந்த சூழ்நிலையில் ஆதாரை அடையாளமாக காட்டி பெறப்பட்ட 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என இன்று தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இந்த தகவலுக்கு  தனிநபர் அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் உண்மையானது அல்ல, தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தனிநபர் அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close