பிறந்த தேதியில் மறைந்த என்.டி. திவாரி

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Oct, 2018 05:05 pm
former-up-and-uttarakhand-cm-nd-tiwari-passes-away

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வருமான என்.டி. திவாரி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

நாராயண் தத் திவாரி என்ற என்.டி.திவாரி  (92) உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் காலமானார். பிரஜா சோஷியலிஸ்ட் கட்சியை ஆரம்பித்த என்.டி. திவாரி பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1976-77, 1984-85, 1988-89 இல் உத்தரப்பிரதேச முதல்வராக என். டி. திவாரி 3 முறை இருந்துள்ளார். உத்தரப்பிரதேசம், உத்ரகாண்ட் என 2 மாநிலங்களில் முதலமைச்சராக இருந்த ஒரே நபர் என்.டி. திவாரி என்பது குறிப்பிடதக்கது. 1925 அக்டோபர் 18 இல் பிறந்த நாராயண் தத் திவாரி 2018 அக்டோபர் 18 ஆம் தேதியான இன்று காலமானார்.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close