லிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கோரியது மாபெரும் தவறு - கர்நாடக அமைச்சர் ஒப்புதல்

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 09:47 am
recommendation-of-seperate-religion-to-lingayat-was-biggest-mistake-karanataka-congress-minister

சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, லிங்காயத்து இன மக்களை தனி மதமாக அறிவித்து, சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது மாபெரும் தவறுதான் என்று தற்போதைய காங்கிரஸ் - மதச்சார்பாற்ற ஜனதா தளம் கூட்டணி அரசில் அமைச்சராக உள்ள டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா அரசிலும் அமைச்சராகப் பணியாற்றியவராவார்.

இந்தப் பரிந்துரையை மேற்கொண்டதன் விளைவுகளை, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார். கர்நாடக மாநிலம், கடாங் பகுதியில் லிங்காயத்து மக்களின் தர்ம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் சிவக்குமார் பேசியதாவது:

“காங்கிரஸ் ஆட்சியின்போது நாங்கள் மாபெரும் தவறை செய்துவிட்டோம். மதம் அல்லது ஜாதி ரீதியிலான விஷயங்களில் எந்தவொரு அரசும் கட்டாயம் தலையிடக் கூடாது. ஆனால், எங்களது அரசு மாபெரும் குற்றத்தை செய்துவிட்டது. அந்த ஆட்சியில் நானும் அமைச்சராக இருந்த நபர்தான். ஆனால்,  இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் இடையே நிறைய கருத்து வேறுபாடு காணப்பட்டது. மத விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது என்பதற்கு இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளே சாட்சியாக அமைந்தன’’ என்றார் அவர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close