சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 04:04 pm
home-ministry-sent-a-notice-to-tn-kerala-karnataka-district-igs

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

சபரிமலைக்கு செல்லும் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்துவதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. பல பெண்கள் பாதி வழியில் திரும்பி வரும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்புடன் சென்றாலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் அவர்களால் செல்ல முடியவில்லை. 

இதையடுத்து அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

அந்த கடிதத்தில், "சபரிமலை பிரச்னையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப காவல்துறையினர் உத்தரவுகளை பிறப்பிக்கலாம். இந்த விவகாரத்தில் தொடர் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதால் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close