உத்தரப்பிரதேசத்தில் குரங்குகள் மீது புகார் பதிவு செய்ய கோரிக்கை 

  Padmapriya   | Last Modified : 20 Oct, 2018 02:34 pm
monkeys-stone-man-to-death-cops-in-fix-as-family-wants-fir

மீரட் நகரில் குரங்குகள் தாக்கி 72 வயது முதியவர் உயிரிழந்தது தொடர்பாக, அப்பகுதி குரங்குகள் மீது புகார் பதிவு செய்ய முதியவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மீரட் அருகே உள்ள பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்.  72 வயதான தரம்பால் சிங், வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விறகு கட்டைகளை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த பாழடைந்த கட்டிடத்தில் வசித்து வந்த குரங்கு கூட்டம், அங்கிருந்த செங்கற்களை தரம்பால் மீது சரவாரியாக வீசி தாக்கின.  

இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில், தரம்பால் இறப்பிற்கு காரணமான குரங்கு கூட்டம் மீது வழக்கு பதிவு செய்வதற்கு குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அவரது குடும்பத்தினர் போலீசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்கு போலீசார், குரங்குகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய இயலாது என்று கூறியதன் காரணத்தினால், தரம்பால் குடும்பத்தினர் காவல்த்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close