டெல்லியில் மோடி-ரணில் சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 03:25 pm
modi-ranil-meets-at-delhi

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை ரணில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close