காவலர் வீர வணக்க நாளில் பிரதமர் மோடி மரியாதை

  டேவிட்   | Last Modified : 21 Oct, 2018 09:08 am
modi-pay-tributes-to-the-policemen

மறைந்த காவலர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளான இன்று பிரதமர் மோடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன படையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
 
இதனையொட்டி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மறைந்த காவலர்களுக்கான நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதேபோல், தமிழகத்தில் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் காவலர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இந்த காவலர் நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close