சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் ஏற்பு: நவ.13ல் விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 11:05 am
sabarimala-review-petition-will-be-heared-on-nov-13

சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்களும் வருகிற நவம்பர் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு  நாடு முழுவதுமே பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சில சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாலும், ஐயப்ப பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். 

மேலும், இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு சீராய்வு செய்ய வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மொத்தமாக இதுவரை 19 மனுக்கள் வந்துள்ளதாக நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், வருகிற நவம்பர் 13ம் தேதி அனைத்து சீராய்வு மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close