மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் வருகை

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 12:04 pm
rajnath-singh-arrives-in-kashmir

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒரு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றடைந்தார். அங்கு பாதுகாப்பு சூழலை அவர் ஆய்வு செய்யவுள்ளதாகவும், குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆய்வு செய்யவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக டுவிட்டரில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான ஒருநாள் பயணமாக தற்போது ஸ்ரீநகர் செல்லவிருக்கிறேன். மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து ஆட்சி நிர்வாக நிலை குறித்தும், காவல்துறை மறும் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்.  இதுதவிர சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை ராஜ்நாத் சிங் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close