பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 12:37 pm
india-summons-official-of-pakistan-high-commision

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் பலியான விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அனுப்பியுள்ள சம்மன் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘’டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரியை, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சுந்தெர்பனி நிலையை ஒட்டிய எல்லைப் பகுதியில் கடந்த 21ம் தேதி பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் பலியானது குறித்து கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு ஊடுருவல்காரர்களின் உடல்களை பெற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை, தங்கள் நாட்டில் இருந்து எந்தவிதத்திலும் அனுமதிக்கக் கூடாது என்ற இருதரப்பு நியதியை பாகிஸ்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close