காஷ்மீர்: வீட்டுச் சிறையை மீறிய பிரிவினைவாதத் தலைவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 03:18 pm
kashmir-separatist-leader-mirwaiz-umer-arrested-after-evading-house-arrest

காஷ்மீரில், வீட்டுச் சிறையில் இருந்த பிரபல பிரிவினைவாத தலைவர் மீர்வெய்ஸ் உமர், தடையை மீறி போராட்டத்தில் இறங்க முயற்சி செய்த நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீவிரதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின், துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிக்கு தடையை மீறி சென்ற பொதுமக்கள் 7 பேர், திடீரென குண்டு வெடித்ததில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரிவினைவாத இயக்கங்கள், ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவெடுத்தன. 

ஸ்ரீநகரின், லால் சவுக் பகுதியை நோக்கி கண்டன பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பிரபல பிரிவினைவாத தலைவர் மீர்வெய்ஸ் உமர், தடையை மீறி,  போராட்டத்தில் கலந்துகொள்ள முயற்சித்தார். ஆனால், அவரை தடுத்து, போலீசார் கைது செய்தனர். அதேபோல, தலைமறைவாக இருந்த மற்றொரு பிரிவினைவாத தலைவரான யாசீன் மாலிக், லால் சவுக் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close