குருகிராம் துப்பாக்கிச் சூடு: நீதிபதியின் மகனும் உயிரிழந்தார்; உறுப்புகள் தானம்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 03:16 pm
gurugram-shooting-son-of-judge-dies-vital-organs-donated

குருகிராமில் பட்டப்பகலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட நீதிபதியின் மகன், இன்று உயிரிழந்தார். தந்தையின் விருப்பத்தோடு, அவரது முக்கிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. 

கடந்த வாரம், குருகிராம் பகுதியை சேர்ந்த நீதிபதி க்ரிஷன் கான்ட்டின் மனைவி மற்றும் மகன், அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பாதுகாவலராலேயே பட்டப்பகலில் சரமாரியாக சுடப்பட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாவலர் கைது செய்யப்பட்ட நிலையில், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அவரது மனைவி ரீத்து ஷர்மா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தீவிர சிகிச்சை பெற்று வந்த அவரது 18 வயது மகன் துருவ், மூளைச்சாவு அடைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. தந்தை க்ரிஷன் கான்ட்டின் விருப்பத்துடன், துருவின் முக்கிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close