உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு!

  shriram   | Last Modified : 26 Oct, 2018 11:39 am
alok-verma-moves-to-sc

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், அதன் இயக்குனர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளித்து நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு. 

மொயீன் குரைஷி வழக்கில் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு இடையே இருந்த சர்ச்சை, இந்த விவகாரத்தால் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளித்து நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு. 

இதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அலோக் வர்மா, தன் மீது எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பல்வேறு வழக்குகளின் விசாரணை பாதிப்படையும் என்று மனு தொடுத்தார். அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை வரும் வெள்ளியன்று விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

அலோக் வர்மாவுக்கு விடுபளிக்கப்பட்ட பிறகு, தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close