ஐ.எஸ். ஆதரவாளர் என சந்தேகம் - தமிழக இளைஞர் டெல்லியில் கைது

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2018 11:47 am
tamil-nadu-is-sympathiser-arrested-in-delhi

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளராகக் கருதப்படும் தமிழக இளைஞரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர். கைதாகியுள்ள சபீக் அஹமது என்ற அந்த இளைஞர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவராவார்.

ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், போலியான பாஸ்போர்ட் பெறுவதற்கு, சபீக் அஹமது கடந்த ஆண்டில் உதவி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்தவர் ஷாஜகான் வெல்லுவா கண்டி. இவர் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியா சென்றார். பின்னர் அங்கிருந்தபடி துருக்கி சென்ற அவர், அந்நாட்டு எல்லையை கடந்து சிரியா செல்ல முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், முஹம்மது இஸ்மாயில் முஹைதீன் என்ற பெயரில் போலியான பாஸ்போர்டுடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் துருக்கி சென்ற ஷாஜகானை, அவரது அடையாளத்தை கண்டறிந்து துருக்கி அதிகாரிகள் கைது செய்தனர். அவர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஷாஜகானை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் சென்னையைச்  சேர்ந்த முஹம்மது முஸ்தஃபா என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமும் தொடர்ச்சியான விசாரணை நடைபெற்று வந்தது. இதில், ஷாஜகான் போலி பாஸ்போர்ட் பெறுவதற்கு அதிராம்பட்டின இளைஞர் சபீக் அஹமது உதவி செய்ததாக தெரியவந்தது என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, சபீக்கை கைது செய்து நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 7 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close