827 ஆபாச இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 03:06 pm
center-bans-porn-again

உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

2015ம் ஆண்டு, குழந்தைகளின் ஆபாச படங்களை கொண்டுள்ள இணையதளங்களை முடக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, விதிவிலக்கில்லாமல் 857 ஆபாச இணையத்தளங்களை மொத்தமாக முடக்கியது மத்திய அரசு. இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதை பின்வாங்கி, குழந்தைகளின் அதிகபட்ச ஆபாச படங்களை கொண்ட இணையதளங்களை மட்டும் முடக்க உத்தரவிட்டது. 

சமீபத்தில், உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில், ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டுமென மனு தொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், 2015ம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவை குறிப்பிட்டு, அந்த 857 இணையதளங்களை மீண்டும் முடக்க உத்தரவிட்டது. இதுகுறித்து, ஆலோசனை செய்த மத்திய அரசு, அவற்றில் 30 இணையதளங்களில் எந்தவிதமான ஆபாச படங்களும் இல்லையென உறுதி செய்து, பின்னர் 827 இணையதளங்களை முடக்க தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முடக்கப்பட்ட ஆபாச இணையதளங்களின் பட்டியல்:

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close