ஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 01:42 pm
delhi-hc-extends-interim-protection-from-arrest-in-inx-media-case-for-p-chidambaram-till-29-november

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நவம்பர் 29ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

தொடர்ந்து ப.சிதம்பரத்தை விசாரணை செய்ய சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் முதற்கட்டமாக  மே 31ம் தேதி வரை  ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் தொடர்ந்து 3 முறை தடை நீட்டித்து உத்தரவிடப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தற்போது ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நவம்பர் 29ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close