அனைத்து ரயில்களிலும் முதல் உதவி மற்றும் மருத்துவ வசதி: இந்திய ரயில்வே  

  சுஜாதா   | Last Modified : 26 Oct, 2018 12:55 am
first-aid-to-be-available-at-all-indian-railway

அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் முதல் உதவி மற்றும் மருத்துவ வசதிகளை இந்திய ரயில்வே வழங்குகிறது;
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரியும் பயண சீட்டை ஆய்வு செய்யும் ஊழியர்கள், கண்காணிப்பாளர், கார்ட்ஸ், நிலைய மேலாளர்களுக்கு முதல் உதவிக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது 

மத்திய ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் அவசர முதல் உதவி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது. இதற்கான மருத்துவப் பெட்டிகளில், பல விதமான மருந்துகள், காயத்திற்கு மருந்திடும் பொருட்கள், நுகர்பொருட்கள், ஆக்ஸிஜன் உருளை மற்றும் மகப்பேறுக்கு தேவையானவை வைக்கப்பட்டுள்ளன. புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின்  நிபுணத்துவம் வாய்ந்த  மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இந்தப் பொருட்கள் ரயில் நிலைய கண்காணிப்பாளர், ரயில் கண்காணிப்பாளர் / கார்ட்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ரயில் பயணத்தின்போது உடல்நலக் குறைவு அல்லது காயம் ஏதேனும் ஏற்பட்டால் பயணிகள் ரயிலில் உள்ள ஊழியர்களை அணுகி முதலுதவி வசதியைப் பெறலாம். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரியும் பயண சீட்டை ஆய்வு செய்யும் ஊழியர்கள், கண்காணிப்பாளர், கார்ட்ஸ், நிலைய மேலாளர்கள் ஆகியோருக்கு முதல் உதவி வழங்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  

மிக அவசரமான மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் பயணிக்கும் மருத்துவர்களின் சேவைகளும் உபயோகிக்கப்படுகின்றன.  இதுபோன்ற மருத்துவர்களுக்கு பயணச் சலுகைகள் வழங்கப்பட்டு, பயணச்சீட்டு கண்காணிப்பாளரிடம் உள்ள பதிவேட்டில் இவர்களின் அடையாளம் தனியாக குறிக்கப்படுவதுடன் ரயில்பெட்டிகளிலும் தகவல் ஒட்டப்படுகிறது.  பயணிக்கும் போது ஏற்படும் மருத்துவ தேவைக்கு ரயில்வே மருத்துவர் அல்லது தனியார் மருத்துவ வசதியை வழங்க அடுத்த ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ரயில்வே, அரசு, தனியார் மருத்துவமனைகள், அவசர ஊர்தி சேவைகள் தொடர்பான முகவரிகள்  மருத்துவ வசதிகள் தொடர்பான தகவல்கள்  ஆகியவை ரயில் நிலைய கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close