பாலியல் வன்முறைகளை நிகழ்த்தும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 26 Oct, 2018 11:14 am
india-urges-un-to-act-against-terrorist-involving-sexual-violence

போர் பகுதிகளில் பெண்களை அடிமைகளாக பிடித்து வைத்து பாலியல் வன்முறைகளை நிகழ்த்தும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பெண் பாதுகாப்பு மற்றும் அமைதி குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்தியாவின் முதன்மைச் செயலாளர் பௌலோமி திருப்பதி பேசியதாவது:

போர் பகுதிகளில் அரசு சாரா போராளிகள் மற்றும் தீவிரவாதிகளால், பாலியல் வன்முறை, பெண்களை பிணைக் கைதிகளாக வைப்பது, ஆள் கடத்தல் போன்ற விஷயங்கள் ஒரு ஆயுதம் போல பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்று பாலின அடிப்படையில் வன்முறையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை பட்டியலிட்டு ஐ.நா. மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. 

பாலியல் வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவும், சிறுமிகளாகவும் உள்ளனர். அவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் சர்வதேச நாடுகள் தங்கள் எல்லைகளை கடந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களைப் பட்டியலிட்டு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது என்ற போதிலும், அதில் யார் ஒருவர் மீதும் பாலியல் ரீதியிலான குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போர் பகுதிகளில் இருந்து மாபெரும் அளவிலான அகதிகள் வெளியேறும் சூழ்நிலையின்போதுதான் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்றார் அவர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close