ஊழல் ஒழிப்பு வாரம்: மக்களிடையே விழிப்புணர்வு!   

  சுஜாதா   | Last Modified : 27 Oct, 2018 07:40 am
vigilance-awareness-week-2018-to-be-observed-from-29th-oct-3rd-nov

‘ஊழலை ஒழிப்போம் – புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 03 வரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம் அனுசரிக்கப்படவுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான 31 அக்டோபர் 31ந் தேதி இடம்பெறும் வாரத்தை, ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.  இந்த ஆண்டு, அக்டோபர் 29 முதல் நவம்பர் 03 வரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம்  ‘ஊழலை ஒழிப்போம் – புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் அனுசரிக்கப்படும். இது தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மத்தியஅரசின் அனைத்து அமைச்சகங்களும், அமைப்புகளும் இந்த ஆண்டின்தலைப்புக்கேற்ப தங்களின் அலுவலகங்களுக்கும் பொதுமக்களுக்கும்சென்றடையும் வகையில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்வது, பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் முக்கியமான இடங்களில், விளம்பர பலகைகள் வைப்பது, சுவரொட்டிகள், துண்டுச் சீட்டுகள் போன்ற விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்குவது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஊழலினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கிராமப் பஞ்சாயத்துக்களில் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். தனியார் துறை, தொழில்துறை வல்லுனர்கள் சங்கம். வர்த்தக சங்கம் மற்றும் சமூகத்தின் பல்வேறு  அமைப்புகளின் பங்கேற்புடன் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். மக்களுக்கு சென்றடையும் வகையில் வாக்கத்தான், மாரத்தான், மிதி வண்டி ஊர்வலம், மனித சங்கிலி, தெருக்கூத்து மற்றும் பிற நிகழ்ச்சிகளும் நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும்.

சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி, மின் அஞ்சல், வாட்ஸ்அப், ஊடகங்கள் மூலம் பல்வேறு அமைப்புகள் ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close