மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களுக்கும் தீ பற்றியுள்ளது. தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மேலும், 10 தண்ணீர் டேங்க் லாரிகள் அங்கு வந்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டுள்ளதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மேலும் விபரங்களுக்கு நியூஸ்டிஎம்-உடன் இணைந்திருங்கள்...
newstm.in