குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நாளை திறப்பு!

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 06:39 pm
sardar-patel-statue-inauguration-tomorrow

குஜராத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள  597அடி உயரமுள்ள வல்லபாய் படேல் சிலை நாளை திறக்கப்படவுள்ளது. 

குஜராத்தில் நர்மதை ஆற்றின் நடுவே 597அடி உயரமுள்ள வல்லபாய் படேல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த சிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 31ம் நாள் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சிலையைத் திறந்து வைக்க இருப்பதாக முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. 

அதன்படி, ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை நாளை திறக்கப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு சிலையை திறந்துவைக்க பிரதமர் மோடி நாளை குஜராத் செல்கிறார். இந்த சிலை உலகிலேயே மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close