மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர்... காவலர் செய்த அசாத்திய உதவி... 

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 06:43 pm
cisf-asi-saves-life-of-55-year-old-man-after-sudden-heart-attack

மும்பை விமான நிலையத்தில் மாரடைப்பு காரணமாக துடித்துக் கொண்டிருந்த பயணி ஒருவருக்கு அங்கிருந்த போலீஸ் அதிகாரி கடைசி நேரத்தில் உதவி இருக்கிறார்.

ஆந்திராவை சேர்ந்தவர் சத்தியநாராயணா குப்பாலா. இவர் மும்பைக்கு கடந்த வாரம் பணி நிமித்தமாக சென்று இருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலை மும்பையில் இருந்து மீண்டும் ஹைதராபாத் வருவதற்காக மும்பை விமான நிலையம் வந்துள்ளார். விமான நிலையத்தில் இவரை அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டு இருக்கும் போதே இவர் கீழே சுருண்டு விழுந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு மூச்சு விட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அங்கிருந்த காவலதிகாரி மோஹித் குமார் சர்மா வேகமாக ஓடி வந்து அவருக்கு உதவி உள்ளார். சிபிஆர் எனப்படும் முதலுதவி முறை மூலம் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். சத்தியநாராயணாவின் இதயத்தை வேகமாக அழுத்தி, வாய் வழியே காற்றை செலுத்தி உள்ளார். இது சிசிடிவியில் பதிவாகி வீடியோவாக வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் பிழைத்துக் கொண்டார். இந்த முதலுதவிக்கு பின் சத்தியநாராயணா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து சத்தியநாராயணாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டியளித்துள்ளார். அதில், சத்தியநாராயனாவிற்கு முதலுதவி செய்யவில்லை என்றால் பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கும். அவருக்கு முதல் 30 நொடிக்குள் போலீசார் செய்த முதலுதவிதான் பெரிய அளவிற்கு உதவியது என்று மருத்துவர் கூறியுள்ளார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close