மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 08:23 pm
sabarimala-temple-will-opened-again

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருப்பதால் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறந்த நாளில் இருந்து நடை அடைக்கப்பட்ட 21-ந்தேதி வரை சபரிமலை போராட்டக்களமாக மாறியது. இந்நிலையில் சபரிமலை கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஸ்ரீசித்திரை திருநாள் பிறந்தநாள் விழாவுக்காக நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட நடை 6-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்பட இருக்கிறது. மீண்டும் நடை திறக்கப்படவுள்ளதால், வருகிற 5 மற்றும் 6-ந் தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவிற்காக மீண்டும் 16-ந்தேதி நடை திறக்கப்படும்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close