வருமானவரி விதிமுறைகளில் புதிய திருத்தங்கள்!

  சுஜாதா   | Last Modified : 31 Oct, 2018 05:21 am
draft-notification-proposing-amendment-of-rules-2c-2ca-and-11aa-and-for-nos-10g-56-and-56g-of-the-income-tax-rules-1962-placed-in-public-domain-for-inputs-from-stakeholders-and-general-public

1962 ஆம் ஆண்டு வருமான வரி விதிமுறைகளில் விதி எண் 2சி, 2சிஏ மற்றும் 11ஏஏ மற்றும் 10ஜி, 56 மற்றும் 56ஜி-யில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் பற்றிய வரைவு அறிவிப்பு, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
 
எந்தவொரு நிறுவனம், அறக்கட்டளை அல்லது நிதியத்தின் சார்பில் பெறப்படும் நிதிக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்கு தற்போதுள்ள விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் டிஜிட்டல் நடைமுறைகளில் அரசு முனைப்பு காட்டி வருவதை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. 

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் மின்னணு கணக்கு தாக்கல் தவிர, நேரடியாகவும் அனுப்புவதை தவிர்க்கும் நோக்கிலும், வருமான வரித் துறைக்கும், வரிசெலுத்துவோருக்கும் இடையிலான நேரடி தொடர்புகளை குறைத்து, கணக்குப் படிவங்களை விரைவாக ஆய்வு செய்யும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. 

அதன்படி, தற்போதுள்ள விதிமுறைகளில் 2சி, 2சிஏ மற்றும் 11ஏஏ மற்றும் 10ஜி, 56 மற்றும் 56டி ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளது.  இதற்கான வரைவு அறிவிப்பு பொதுமக்களின் பார்வைக்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் (www.incometaxindia.gov.in)  வெளியிடப்படுகிறது.  இந்த திருத்தச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பும், சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ustpl1@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 12, 2018 –க்குள் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் விவரங்களுக்கு : https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/280/Forms-10G-56-56D-Final-Draft-Notification-Website-MiscComm-29-10-2018.pdf

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close