இந்தியாவில் பொதுசுகாதார சேவை திட்டம் தொடர்பான 5-வது தேசிய உச்சிமாநாடு

  சுஜாதா   | Last Modified : 31 Oct, 2018 06:11 am
good-replicable-practices-innovations-in-public-healthcare-systems-in-india

இந்தியாவில் பொது சுகாதாரத் திட்டத்தில் சிறந்த மற்றும் பிரதிபலன் சேவைகள், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த 5-வது தேசிய உச்சிமாநாட்டை மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் முன்னிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  ஜே.பி. நட்டா அஸ்ஸாம் மாநிலம், காஸிரங்காவில் நேற்று (30.10.2018) தொடங்கி வைத்தார். உலக அளவிலான சுகாதார சேவை தொடர்பான சிறந்த சேவைகள், நடவடிக்கைக்கான ஆதாரம் குறித்த Coffee Table புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். 

     இந்நிகழ்வில் பேசிய நட்டா, பிரதமரின் தாரக மந்திரமான சீர்திருத்து, செயல்படு, மாற்றியமை என்பதற்கிணங்க, அவரது தலைமையின்கீழ், புதிய அணுகுமுறைகளையும் சவால்களையும் எதிர்கொள்வதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகத்  தெரிவித்தார். விரும்பிய திட்டங்களை நிறைவேற்ற வேகம், திறன் மற்றும் நேரத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்று  நட்டா வலியுறுத்தினார்.

     கூட்டாட்சித் தத்துவத்தில் அரசு நம்பிக்கை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மாநிலங்களின் நிலைப்பாடுகளில் சுகாதார அமைச்சகம் ஒன்றிணைந்து செயல்படுவதாகக் கூறினார். மாநிலங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், நிதி தொடர்பான ஆதரவையும் வழங்க அரசு தயாராக இருப்பதாகவும்  நட்டா தெரிவித்தார். கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் அதிகாரத்தை பரவலாக்குவது மட்டுமல்ல, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதிலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதிலும் அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

     ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டமானது உலகின் மிகப் பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் என்பதைக் குறிப்பிட்ட திரு. நட்டா, திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே, ஒன்றரை லட்சம் மக்கள் பயன்பெறவிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களும் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close