தமிழில் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்ட ஒற்றுமையின் சிலை!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 09:37 am
central-government-wrongly-translated-the-statue-of-unity-in-tamil

குஜராத்தில் இன்று திறக்கப்பட இருக்கும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை சுற்றியுள்ள பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் பெயர் பலகையில் ‘STATUE OF UNITY’  என்பது தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செய்யும் வகையில்,  குஜராத் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு அருகில் உலகின் மிக உயரமான சிலையை மத்திய அரசு அமைத்துள்ளது. 33 மாதங்களாக நடந்த இவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அவருடைய  143வது பிறந்த நாளான இன்று சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. 

இந்த சிலைக்கு ‘STATUE OF UNITY’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பு 'ஒற்றுமையின் சிலை' என்பதாகும். 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை  6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்க கூடியது.

இந்த சிலையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில்  ‘STATUE OF UNITY’ என்னும் பெயரை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். அதில், தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ எனத் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது தவறான மொழிப்பெயர்ப்பு என அறிந்ததும் அதனை மட்டும் அழித்துள்ளனர். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சி பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close