படேல் பிறந்தநாள்: நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் மரியாதை

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 09:26 am
president-vice-president-paid-tributes-to-sardar-vallabhbhai-patel

படேலின் 143வது பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இந்திய நாட்டின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்லேின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள படேல் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் படேல் முக்கிய பங்காற்றியவர் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய சிலையான இதனை இன்று மோடி திறந்து வைக்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close