இந்திரா காந்தி நினைவு தினம்: ராகுல், சோனியா, மன்மோகன் சிங் மரியாதை

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 09:44 am
rahul-sonia-paid-tributes-to-indira-gandhi-on-her-death-anniversary

இந்தியாவின் முதல் பெண் முதல்வர் இந்திரா காந்தியின் நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நமது முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவருக்கு  மரியாதை செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close