சத்தீஸ்கர் நக்சல் தாக்குதலில் பலி 4 ஆக அதிகரிப்பு!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 11:25 am
chattisgarh-naxal-attack-death-toll-rises-to-4

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேற்று தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உள்பட மூன்று பேர் பலியான நிலையில் இன்று பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் தொடர்ந்து ஊடுருவி வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று  தண்டேவாடா அருகே அரான்பூரில் ஊடுருவிய நக்சல் தீவிரவாதிகள், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் தான் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நேற்றைய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close