ரிசர்வ் வங்கி சிறப்புச் சட்டத்தை பயன்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் - ப.சிதம்பரம் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 11:28 am
p-chidambaram-warns-about-invoking-rbi-special-act

ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பிக்க வழி வகையும் சிறப்பு பிரிவை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளதாக வெளிவரும் தகவல்கள் உண்மையானால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

1934ம் ஆண்டில் இயற்றப்பட்ட ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 7ன்படி, மிக இக்கட்டான சமயங்களில் பொதுநலன் கருதி, ரிசர்வ் வங்கி ஆளுநருடன் கலந்து ஆலோசித்த பிறகு மத்திய அரசே நேரடியான உத்தரவுகளை பிறப்பிக்க இயலும். இதுவரையிலும் எந்தவொரு அரசும் இந்த சிறப்பு சட்டப் பிரிவை பயன்படுத்தியது இல்லை என்பதே வரலாறு.

இந்நிலையில், சிறப்பு சட்டப்பிரிவை தற்போது மத்திய அரசு செயல்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், அது உண்மையானால், எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ப.சிதம்பரம் டுவிட்டரில் தெரித்துள்ளார். கடந்த 1991ம் ஆண்டில் பொருளாதார உலகமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்பட்டபோதும், 1997ல் ஆசிய அளவிலான பொருளாதார நெருக்கடி அல்லது 2008ல் உலக அளவிலான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும்கூட சிறப்பு அதிகாரச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழலில் சிறப்பு அதிகாரச் சட்டத்தை பயன்படுத்த வேண்டிய தேவை என்ன? அப்படியானால், பொருளாதாரம் குறித்த தகவல்களை மத்திய அரசு மறைக்க முயற்சிப்பது போல தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close