வல்லபாய் படேல் சிலையின் சிறப்புகள் என்ன?

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 02:49 pm

important-points-abour-sardar-vallabhai-patel-statue

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பாய் படேலின் சிலைதான்  தற்போது உலகில் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. இது தவிர வேறுசில சிறப்பம்சங்களும் படேல் சிலைக்கு உள்ளன.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைக் காட்டிலும், படேல் சிலை இரண்டு மடங்கு பெரியதாகும். படேல் சிலையின் மொத்த உயரம் 182 மீட்டர்.

சர்தார் சரோவர் அணையின் கீழ் பகுதியில் 3.5 கிலோ மீட்டருக்கு அப்பால், நர்மதை நதிக்கரையில் படேல் சிலை அமைந்துள்ளது. அதன் மொத்த கட்டுமானச் செலவு ரூ.2,989 கோடிகளாகும். 

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், 34 மாதங்களில் அனைத்துப் பணிகளையும் முடித்து சிலை திறக்கப்பட்டுள்ளது. 

சிலை தயாரிப்புக்காக 70,000 டன் சிமெண்ட், 18,500 டன் உருக்கு, 6,000 டன் உருக்கு கம்பிகள் ஆகியவையும், சிலையின் வெளிப்பூச்சுக்காக 1,700 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மணிக்கு 180 கி.மீ. வரையில் காற்று வீசினாலும்கூட கம்பீரமாக நிற்கும் வகையில் சிலை வடிமைக்கப்பட்டுள்ளது.

சிலையின் உள்பகுதியில் படேலின் சிறப்புகளை விளக்கும் கண்காட்சியாகம், 135வது மீட்டர் உயரத்தில் பார்வ்வையாளர் மாடம், அதற்கு மேலே சிலை பராமரிப்பு அலுவலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close