கேரள முதல்வருக்கு விழுந்த முதல் அடி: எச்.ராஜா விமர்சனம்!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 05:15 pm
sabarimala-south-indian-ministers-skip-meeting-cm-didn-t-attend

சபரிமலை பிரச்னை தொடர்பாக விவாதிக்க தென் மாநிலங்கள் அனைத்திற்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தென் மாநிலத்தவர் யாரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது தொடர்பாக இந்து அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 17 முதல் 22ம் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வருகிற நவம்பர் 5ம் தேதி கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது. இதனால் முன்னதாக போராட்டம் நடைபெற்ற சூழ்நிலையில், இந்தமுறை போராட்டம் எதுவும் நடைபெறாமல் இருக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்களை அழைத்துபேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில்  தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டு சபரிமலை விவகாரம் குறித்து பேசலாம் என்றும் பின்னர் இது தொடர்பாக அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என பினராயி தெரிவித்திருந்தார். ஆனால் இன்றைய கூட்டத்திற்க்கு எந்த மாநில அமைச்சரும் வரவில்லை. 

இதையடுத்து, கேரள முதல்வர், மற்ற தென் மாநில அமைச்சர்களை அழைத்தும் அவர்கள் வராதது கேரளா முதல்வருக்கு விழுந்த முதல் அடி என எச்.ராஜா விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று கேரள முதல்வர் தென் மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் எந்த முதல்வரும் தங்களது அமைச்சர்களை அனுப்பவில்லை. சபரிமலை பிரச்சினை குறித்து தனது இந்து விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தேடும் முயற்சிக்கு விஜயன் அவர்களுக்கு முதல் அடி" என குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close