ரிசர்வ் வங்கியுடன் மோதலா? நிதி அமைச்சகம் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 06:12 pm
autonomy-of-reserve-bank-essential-says-finance-ministry

இந்திய பொருளாதாரத்துக்கும், பொது நலன் சார்ந்தும் தான் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இயங்க முடியும். இந்த காரணத்துக்காக ரிசரவ் வங்கியுடன் தேவையின்பேரில் கலந்தாலோசிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சக விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மோதல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின. மத்திய அரசு இதுவரை பயன்படுத்தாத வகையில் அதிகாரத்தை ரிசரவ் வங்கி மீது பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொது நலன் கருதி பல்வேறு சமயங்களில் ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது. இது குறித்து நடக்கும் விவாதங்கள் பற்றி மத்திய அரசு வெளிப்படையாக தெரிவித்ததில்லை. தொடர்புடைய விவாதங்களின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தான் பொதுத் தளத்தில் தெரிவிக்கப்படும். 

இந்திய பொருளாதாரத்துக்கும், பொது நலன் சார்ந்தும் தான் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இயங்க முடியும். இந்த காரணத்திற்காக, ரிசரவ் வங்கியுடன் சிலமுறை கலந்தாலோசிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, ஆர்பிஐ சட்டப் பிரிவு 7-ஐ பயன்படுத்தி, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கடிதம் அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சட்டப் பிரிவு 7-ன் எனப்படுவது, 'பொது நலன் கருதி, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் கலந்தாலோசித்தப் பிறகு, மத்திய அரசு சில வழிகாட்டுதல்களைக் கூறலாம்' என்பதாகும். இந்த சட்டப் பிரிவை இதற்கு முன்னர் மத்திய அரசு பயன்படுத்தியது இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தையொட்டி, ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல், தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் பரவலாக பேசப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close