சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 09:00 pm

india-jumps-23-places-in-world-bank-s-ease-of-doing-business-rankings

சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது. 

தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது.  கடந்த 2004-ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டில் 30 இடங்கள் முன்னேறி 100 நாடுகளில் ஒன்றாக உயர்ந்தது.

உலக வங்கி இன்று வெளியிட்ட நிகழாண்டிற்கான சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை கைப்பற்றியுள்ளது.  கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய அளவில் 6வது இடத்தில் இருந்த இந்தியா இந்த அபரிமிதமான முன்னேற்றத்தின் மூலம் தெற்காசியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளில் முதலிடத்தையும் இந்தியா தற்போது பிடித்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.