குடியரசு துணைத் தலைவர் மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம்

  சுஜாதா   | Last Modified : 01 Nov, 2018 08:35 am
vice-president-embarks-on-three-nation-africa-visit

குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அக்டோபர் 31-முதல் நவம்பர் 6-வரை அரசு பயணமாக ஆப்பிரிக்க  நாடுகளுக்கு செல்லவுள்ளார். இதனையடுத்து நேற்று டெல்லியில் இருந்து  புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த ஒருவாரகால பயணத்தின்போது, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளுக்கு செல்வதுடன், அந்தந்த நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசவுள்ளார்.

 குடியரசு துணைத் தலைவருடன் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அடங்கிய உயர்மட்ட நாடாளுமன்ற தூதுக்குழுவும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close