பிரதமர் திட்டம் மூலம் சுமார் ரூ.600 கோடி அளவிற்கு மிச்சம்

  சுஜாதா   | Last Modified : 01 Nov, 2018 08:39 am
citizens-save-around-rs-600-crores-till-date-during-fy-2018-19-under-pmbjp-shri-mansukh-mandaviya

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்து விற்பனை திட்டத்தின் மூலம் 2018-19 நிதியாண்டில் இதுவரை மக்கள் ரூ.600 கோடி அளவிற்கு மிச்சப்படுத்தியுள்ளனர் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சரமன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், மக்கள் மருந்தகங்கள் மூலம் இந்த நிதியாண்டில் (அக்டோபர் 2018 வரை) மருந்து விற்பனை 150 கோடி ரூபாயை மிஞ்சியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், குறியீடு பெற்ற மருந்துகளின் சராசரி சந்தை விலையோடு ஒப்பிடும் போது, இந்த மருந்துகள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மலிவாக இருப்பதால் சாமானிய மக்கள் சுமார் 600 கோடி ரூபாய் மிச்சப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

640 மாவட்டங்களில் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 4,300-க்கும் அதிகமாகியுள்ளது.  2018-19 இறுதியில் இந்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், இவற்றின் ஆண்டு விற்பனை ரூ. 300 கோடியை மிஞ்சும் என்றும்,  மண்டாவியா தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close