நக்சல் தாக்குதலின் போது தனது தாய்க்கு உருக்கமான வீடியோ பதிவு செய்த டிடி ஊழியர்!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 06:47 am
dd-crew-member-records-message-for-his-mother-during-naxal-attack

சட்டிஸ்கரின் டன்டேவாடா பகுதியில் நடைபெறும் தேர்தலை பதிவு செய்ய சென்றிருந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலின் போது, ஒரு ஊழியர் தனது தாய்க்கு பதிவு செய்த உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது. 

டன்டேவாடா பகுதியில் உள்ள நிலவாயாவில், கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடுவதில்லை. இதுகுறித்து செய்தி சேகரிக்க அங்கு போலிஸ் பாதுகாப்புடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சி குழு ஒன்று சென்றிருந்தது. அப்போது, திடீரென நக்சல் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், டிடி கேமரா மேன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 

சம்பவத்தின்போது, கேமரா மேனின் உதவியாளர் மோர் முகுத் ஷர்மா, மற்றும் செய்தியாளர் தீரஜ் குமார் ஆகியோர் உயிர் தப்பினர். துப்பாக்கிச் சூடு நடப்பது தெரிந்தவுடன், ஒரு பள்ளத்தில் விழுந்த ஷர்மா, தனது தாய்க்கு உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், "அம்மா. இந்த தாக்குதலில் இருந்து நான் மீண்டு வருவேனா என்பது சந்தேகம் தான். நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. ஆனால், சாவின் விளிம்பில் கூட எனக்கு ஏனோ பயம் இல்லை" என பதிவிட்டார். வீடியோவின் பின்னணியில் துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தம் கேட்கிறது. நக்சல்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அசையாமல் பேசும் ஷர்மா, இந்த சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது அவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close