இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது - நிதீஷ் குமார்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 09:26 am

no-one-can-scrap-reservation-nithish-kumar

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அதை காப்பாற்றுவதற்கு எந்தவிதமான தியாகங்களை செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்தார். 

பிகார் மாநிலம், கயா நகரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அணியின் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதீஷ் குமார் பேசியதாவது:

சமூகத்தில் வேற்றுமைகளை உருவாக்கவும், பதற்றத்தை ஏற்படுத்தவும் சிலர் விரும்புகின்றனர். அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை, அரசியல் சாசன சபை ஏற்றுக் கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களும் சமூகத்தின் பொதுவெளிக்கு முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. இதை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இடஒதுக்கீட்டை காப்பதற்காக என்னைப் போன்றவர்கள் எந்தவிதமான தியாகத்தை செய்வதற்கும் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த விவகாரத்தை பற்றி பேசும் சிலர், இடஒதுக்கீட்டை கொண்டு வருவதற்காக எதையுமே செய்ததில்லை என்றார் அவர். 

newstm.in

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.